உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு: ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’ சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்!

inside grand egyptian museum 77779

எகிப்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க தொல்லியல் அருங்காட்சியகமான ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’ (Grand Egyptian Museum – GEM) நவம்பர் திறக்கப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகாமையில் உள்ள கிஸா பள்ளத்தாக்கில், பிரமிடுகளைப் பிரதிபலிக்கும் அதே வடிவில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியக வளாகம் மொத்தம் 50 ஹெக்டேர் (சுமார் 70 கால்பந்து திடல்களின் அளவு) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இது 50,000 இற்கும் மேற்பட்ட பழங்கால கலைநயப் பொருள்களைக் காட்சிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட வளாகம், கிஸாவில் உள்ள மூன்று பிரமிடுகளையும் ஸ்பின்க்சையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத் திறப்பு விழாவின் மூலம், பல்வேறு நாடுகளிலிருந்தும் எகிப்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் நான்காம் திகதி முதல், பார்வையாளர்கள் இந்த வளாகத்தை முழுமையாகச் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version