லா பல்மா தீவில் அதிசய வீடு!

ஸ்பெயினில் இருக்கும் லா பால்மா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்ரே வியெகா எரிமலை வெடித்தது.

தீவில் லாவா குழம்பு வழிந்தோடி சுமார் 200 வீடுகள் அழிந்திருப்பதோடு சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து எரிமலை வெடித்து வரும் நிலையில் அதன் எரிமலைக் குழம்பில் இருந்து அசாதாரணமான முறையில் தப்பித்த வீடு ஒன்றின் புகைப்படம் தற்போது பிரபலமடைந்துள்ளது.

அல்பொன்சோ எஸ்கெலேரோ என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட இப் புகைப்படத்தில் எரிமலைக் குழும்பு வீட்டை சுற்றி ஓட நடுவே அந்த வீடு எந்தப் பாதிப்பும் இன்றி காணப்படுகிறது.

லா பல்மாவில் இருக்கும் இந்த வீட்டை மக்கள் ‘அதிசய வீடு’ என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் எரிமலையில் இருந்து கொட்டும் எரிமலைக் குழம்பு தொடர்ந்து நகர்ந்து வருகிறது.

இந்த எரிமலை வெடிப்பு இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகளால் உறுதி செய்ய முடியாதுள்ளது.

sep23spain6

Exit mobile version