உலகம்செய்திகள்

இளவரசர் வில்லியமைக் கட்டியணைத்த பெண்கள்… சத்தமிட்ட வருங்கால மன்னர்: ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

5 4 scaled
Share

இளவரசர் வில்லியமைக் கட்டியணைத்த பெண்கள்… சத்தமிட்ட வருங்கால மன்னர்: ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளவரசர் வில்லியம், கட்டிப்பிடிக்கும் இளவரசராகவே மாறிவிட்டிருந்தார். ஆம், வருங்கால மன்னரைக் கட்டியணைத்துக்கொள்ள பெண்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.

நேற்று, வேல்ஸ் நாட்டின் தலைநகரான Cardiffஇல் நடைபெற்ற Black History Month தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் கலந்துகொண்டார்கள்.

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கருப்பின மக்கள் மற்றும் நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இந்த Black History Month கொண்டாடப்படுகிறது.

சரி, விடயத்துக்கு வருவோம்! வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள தன் மனைவியுடன் வந்திருந்த இளவரசர் வில்லியமைக் கட்டியணைத்துக்கொள்ள பெண்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.

உங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்ளலாமா என முதலில் இளவரசர் வில்லியமைக் கேட்டது, Roma Taylor (79) என்னும் பெண்தான். Windrush Cymru Elders என்னும் அமைப்பின் நிறுவனரான Roma, கடந்த ஆண்டு மன்னர் சார்லஸ் வேல்ஸ் நாட்டுக்கு வந்தபோது, அவரது கையைப் பிடித்துக்கொண்டார். அவர் மன்னர் கையைப் பிடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க, பிறகு மன்னருடைய பாதுகாவலர் ஒருவர் வந்து, தயவு செய்து மன்னருடைய கையை விடமுடியுமா என்று கேட்டுக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்தது.

அப்படியே வரிசையாக பல பெண்கள் இளவரசர் வில்லியமைக் கட்டிப்பிடித்துக்கொள்ள கோரிக்கை வைக்க, வில்லியம் அவர்களை அன்புடன் அணைத்துக்கொள்ள, அவர் உண்மையாகவே அன்புடன் தங்களை அணைத்துக்கொண்டதை அந்தப் பெண்களால் நம்பமுடியவில்லை. வருங்கால மன்னரைக் கட்டியணைத்துக்கொண்டோம் என்று சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள் அவர்கள்.

அடுத்தபடியாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அனைவரும் வில்லியமையும் கேட்டையும் சூழ்ந்துகொள்ள, திடீரென, என் பின்பக்கத்தைக் கிள்ளியது யார் என வேடிக்கையாக வில்லியம் சத்தம்போட, எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, வாயெல்லாம் பல்லாக அனைவரும் சிரிக்கும் காட்சிகள் புகைப்படமாக பதிவாகின.

வில்லியம் மன்னராகும்போது, இந்த மக்கள் நிச்சயம் இந்த சம்பவங்களை நினைவுகூரப்போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

African Community Centre Wales and Race Council Cymru என்னும் அமைப்பின் நிறுவனரான பேராசிரியர் Uzo Iwobi என்பவர் இளவரச தம்பதியருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பளித்தார்.

சமீபத்தில், பேராசிரியர் Uzo Iwobiக்கு, Order of the British Empire என்னும் கௌரவத்தை வழங்கியிருந்தார் இளவரசர் வில்லியம். அப்போது, நீங்கள் வேல்ஸ் நாட்டுக்கு வந்து எங்கள் அமைப்பை பார்வையிடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாராம் வில்லியம்.

நேற்றைய நிகழ்ச்சியின்போது பேராசிரியர் Uzo Iwobiயை சந்தித்த வில்லியம், நான் உங்களை வந்து சந்திப்பதாக சொல்லியிருந்தேன், நான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன் என்று கூற, அதைச் சொல்லிச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறார் அவர்.

ஆக மொத்தத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவர் மனதிலும் நிரந்தர இடம்பிடித்துவிட்டார் வருங்கால மன்னர் வில்லியம் என்றே கூறலாம்!

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...