மன்னர் சார்லசுடைய ஆட்டுக்குட்டிகளைத் திருடிய மூன்று பெண்கள்!

6 14

மன்னர் சார்லசுடைய ஆட்டுக்குட்டிகளைத் திருடிய மூன்று பெண்கள்!

மன்னர் சார்லசுக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்றிலிருந்து ஆட்டுக்குட்டிகளைத் திருடியதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உண்மையில், Animal Rising என்னும் போராட்டக் குழுவே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மூன்று பெண்கள் வயல் ஒன்றில் வழியாக நடந்து சென்று, மூன்று ஆட்டுக்குட்டிகளைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், கால்நடைகள் வைத்திருக்கும் யாராக இருந்தாலும், அவற்றை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது, அது குறித்து பதிவேடு ஒன்றில் பதிவு செய்தாகவேண்டும் என்பது விதி.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள், அடுத்த மாதம் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.

Exit mobile version