tamilnaadi 144 scaled
உலகம்செய்திகள்

சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண்

Share

சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண்

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், என்ன வேலைக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியாது.

உங்களுக்கு சம்பளம் தான் முக்கியம். மற்றவை எல்லாம் அதற்கு பிறகுதான் என்று சொல்பவராக இருந்தால், இந்த வேலையைப் பற்றி தெரிந்து கொண்டு முயற்சி செய்யுங்கள்.

சம்பளம் என்பது வேலையும் அதன் தன்மையையும் பொறுத்தது. சில துறைகளில், ஊழியர் சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகளை ஆண்டுக்கு ஒரு முறை பெறுகிறார்.

சில வேலைகளில், பணியாளர் ஓய்வு பெறும் வரை பாரிய சம்பளம் இருக்காது. இதனால், நல்ல வேலை தேடுவதுதான் இப்போது அனைவரின் லட்சியமாக உள்ளது.

லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை இருந்தாலும், சிலர் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக, சில வவுச்சர்கள், பயணங்கள், இலவச வசதிகள் என்று கோடிக்கணக்கில் கிடைக்கும் வேலை தேடி அலைகிறார்கள்.

கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வேண்டுமானால் சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து தூரமாக இருக்கவேண்டும், ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டும், அப்படி இருந்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தயாராக உள்ளனர்.

ஆனால் சிலருக்கு அத்தகைய வேலை எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. Tik-Tokகில் தனது பணி குறித்து ஒரு பெண் தகவல் தெரிவித்துள்ளார். இவர் செய்யும் வேலையும், சம்பளம் கேட்ட நெட்டிசன்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அவர் பெயர் ஷம்ஸ் அல்பயாதி. வயது 27. அவர் செய்யும் வேலைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம். சம்பளம் மட்டுமின்றி அனைத்து விதமான சொகுசு வசதிகளையும் பெறுகிறார்.

ரிசார்ட்டில் இருப்பது போன்ற வசதிகள், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் செலவுகள் குறைவு.

எனவே, அவர் தனது பொழுதுபோக்கை நிறைவேற்ற பணத்தை தாராளமாக பயன்படுத்துகிறார். அதுமட்டுமின்றி, அவர் கொஞ்சம் பணத்தை சேமித்து வைக்கிறார்.

ஷம்ஸ் அல்பியாட்டி Google, Facebook, Amazon உள்ளிட்ட சில IT நிறுவனங்களில் பணிபுரிகிறார் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு.

ஷம்ஸ் ஒரு பொறியாளர் (Field Engineer). அவர் உலகின் மிகப்பாரிய எண்ணெய் சுரங்கத்தில் வேலை செய்கிறார். அதுவும், வீட்டலிருந்து வெகு தொலைவில் செய்கிறார்.

எண்ணெய் சுரங்கங்களில் சேதமடைந்த மற்றும் உடைந்த இயந்திரங்களை சரிசெய்வது ஷம்ஸ் அல்பயாட்டியின் வேலை.

இந்த வேலைக்கு ஷம்ஸ் 100,000 Pounds (இலங்கை பணமதிப்பில் ரூ. 4 கோடி) சம்பளம் வாங்குகிறார்.

அங்கு அவர் நிறைய கற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக மெக்சிகோ, நார்வே, மால்டா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்த ஷம்ஸ், அங்குள்ளதை விட எண்ணெய் சுரங்கத்தில் அதிக வசதிகளைப் பெறுவேன் என்று கூறுகிறார்.

எண்ணெய் சுரங்கத்தில் பணிபுரியும் ஷம்ஸ், உணவைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருக்கு ஒரு நல்ல சமையல்காரரால் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. மருத்துவ வசதியும் உண்டு.

எண்ணெய் சுரங்கத் துறை மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஷம்ஸ் இதை மறுக்கிறார்.

ஷம்ஸின் இதில் எந்த ஆபத்தும் இல்லை என்கிறார். பேரழிவு கணிக்கப்படும் போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவோம் என்கிறார்

மேலும், Gaming Zone, Music Room, Spa உள்ளிட்ட பல வசதிகள் இங்கு இருப்பதாக ஷம்ஸ் கூறுகிறார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...