பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 10

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மான்செஸ்டரின் பரபரப்பான வீதியான Great Ancoatsயில் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் லியோனார்டோ ஹொட்டல் மற்றும் விக்டோரியா ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தடுப்பு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகம், மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்தது.

மேலும் Greater Manchester Police கூறுகையில், “இன்று காலை 7 மணியளவில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்க Great Ancoats வீதிக்கு அழைக்கப்பட்டோம். அவர் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாகத் தெரிகிறது.

ஆனால் தற்போது சூழ்நிலைகளைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

Exit mobile version