15 8
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கலவரம் வெடிக்க காரணமான பிரதான பெண் சூத்திரதாரி கைது

Share

பிரித்தானியாவில் கலவரம் வெடிக்க காரணமான பிரதான பெண் சூத்திரதாரி கைது

பிரித்தானியாவில் சவுத்போர்ட் (Southport) தாக்குதல்தாரி தொடர்பில் தவறான பதிவை முதலில் வெளியிட்டு, நாடு முழுவதும் கலவரம் வெடிக்க காரணமான பெண் கைதாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பதிவில் தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், சிறுபடகு மூலமாக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் நுழைந்தவர் என்றும், MI6 கண்காணிப்பு பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செஸ்டர் (Chester) பகுதி அருகாமையில் வைத்து அவர் கைதாகியுள்ளதோடு, தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிரித்தானியாவின் முக்கியமான பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இணையத்தில் பரவிய தவறான தகவல்கள் காரணமாகவே பெரும்பாலான நகரங்களில் கலவரம் வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரத்தில் கைதான பெண் ஒரு கோடீஸ்வரர் என்றும், பெர்னாடெட் ஸ்போஃபோர்ட் (Bernadette Spofforth) என்பது அவரது பெயர் எனவும் தகவல் கசிந்துள்ளது.

தாக்குதல் தாரியின் பெயர் உட்பட எந்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் வெளியிடும் முன்னர், சந்தேக நபரின் பெயர் Ali Al-Shakati என அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இவை அனைத்தும் உண்மை என்றால் பிரித்தானியா பற்றியெரிவது உறுதி என்றும் அந்த பெண் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் , சுமார் 38 நிமிடங்கள் முன்னர் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இருந்து ஒருவர் பதிவிட்ட தகவல்களை மட்டுமே தாம் நகலெடுத்து பதிவிட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் இதே தகவலை அப்போது பதிவிட்டிருந்தாலும், அவை உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், இவர் பகிர்ந்த தகவலானது ரஷ்ய சமூக ஊடக பயனர்களால் தீயாக இணையத்தில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான Tommy Robinson மற்றும் Andrew Tate ஆகியோரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால் தீவிர வலதுசாரிகளால் பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...