2022 வரை அவுஸ்ரேலியாக்குள் நுழைய முடியாது – பிரதமர் ஸ்கொட் மோரிசன்

Prime Minister Scott Morrison

Prime Minister Scott Morrison

கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2022 ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அவுஸ்ரேலியாவிற்குள் வர அனுமதி கிடையாது.

இவ்வாறு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மட்டும் இவ் உத்தரவில் இருந்து விலக்களிக்கப்படும்.

நவம்பர் முதல் 2 ஆம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட நிரந்தரக் குடிமக்கள்
வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் – என அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார்.

Exit mobile version