tamilni 324 scaled
உலகம்செய்திகள்

உதயநிதியுடன் நெருங்கிய தொடர்பு.., சிவகங்கை தொகுதியில் கரு.பழனியப்பன் போட்டியிடவுள்ளாரா?

Share

உதயநிதியுடன் நெருங்கிய தொடர்பு.., சிவகங்கை தொகுதியில் கரு.பழனியப்பன் போட்டியிடவுள்ளாரா?

சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் போட்டியிட உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர்கள் இறங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏகள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் ஆகியோர் கூறி வருகின்றனர். இதனால், சிவகங்கை தொகுதியில் திமுக தான் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் ரகுபதி மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர்.

இவர்களை தவிர காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பெயரும் அந்த வரிசையில் அடிபடுகிறது. அதிலும், கரு.பழனியப்பன் அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக, கருப்பு, சிவப்பு வேட்டி கட்டாத திமுக-காரர் கரு.பழனியப்பன் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது சிவகங்கை தொகுதி சீட்டை கரு.பழனியப்பன் வாங்கிவிடுவார் என்று பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...