பிரான்சின் 101 நிர்வாகப் பகுதிகளில் 84 பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் வாரத்தின் நடுப்பகுதி வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தின் துவக்கத்தில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தயாராகிவருகிறார்கள்.
தென்மேற்கு பிரான்சில் உள்ள Corbieres பகுதியில் காட்டுத்தீ உருவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்தவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை நாட்டின் தெற்கில் தொடங்கிய கடுமையான வெப்பநிலை திங்கட்கிழமைக்குள் கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதும் பரவியிருக்கும், மத்தியதரைக் கடலில் அதிகபட்சமாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து வழிகாட்டுதல்களையும், குறிப்பாக சுகாதாரம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் மறுஆய்வு செய்வதற்காக வெப்ப அலை குறித்த நெருக்கடி கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டப்பட்டதாக உள்துறை அமைச்சர் புருனோ ( Bruno Retailleau) தெரிவித்துள்ளார்.