உலகம்செய்திகள்

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

24 663be034b259c
Share

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

நாய்கள்(dogs) பெரியவர்களை விடவும் சிறுவர்களையே பெரும்பாலும் துரத்தி துரத்தி கடிப்பதுண்டு. இவ்வாறு நாய்கள் சிறுவர்களை(children) ஏன் குறிவைத்து தாக்குகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல கால்நடை மருத்துவர் பற்றிக் ஜோஷ்வா தெரிவிக்கையில்,

“நாய்களின் பெரும்பாலான இலக்காக இருப்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான். ஏனென்றால், அந்த வயதில் உள்ள குழந்தைகளின் செயற்பாடுகள் அப்படி இருக்கும்.

குழந்தைகள் பொதுவாக ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். திடீர் திடீரன ஓடுவார்கள். கை கால்களை அசைப்பார்கள். பயப்படுவார்கள். இவை அனைத்துமே நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்.அதனால், நாய்களுக்கு குழந்தைகள் மீது சட்டென பார்வை திரும்புகிறது.

அதேபோல, குழந்தைகள் நாய்களுக்கு இணையான உயரத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, நாய்களின் கண்களை சரிக்கு சமமாக பார்ப்பார்கள். நாய்களின் கண்களை உற்று பார்த்தால் அவற்றுக்கு பிடிக்காது.

அப்படி பார்ப்பது, ஏற்கனவே கோபத்தில் உள்ள நாய்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் தாக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...