பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி வலுத்துள்ளது.
இதில் சட்டமா அதிபர் சுவெல்லா பிரேவமான் மற்றும் ஸ்டீவ் பேக்கரை தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டொம் டெஜன்டட்டும் குதித்துள்ளார்.
தம்மைத் தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும் அவர் உடன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சக கட்சியைச் சேர்ந்த பலர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்.பிக்கள் சிலரை, பிரதமரின் இராஜினாமாவைக் கோரத் தூண்டியது.
இந்நிலையில் ஆளும் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக கால அட்டவணை அடுத்த வாரம் உறுதி செய்யப்படவுள்ளது. புதிய பிரதமர் வரும் செப்டெம்பரில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#World