ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்!

24 664afbacd974c

ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அஜர்பைஜானி எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்து இருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் 69 வயது துணை ஜனாதிபதி முகமது மொக்பர் ஈரான் நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்று தெரியவந்துள்ளது.

நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் நெருக்கிய தொடர்பு இருப்பதுடன், முகமது மொக்பர் அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

50 நாட்களுக்கு தேர்தல் இதற்கிடையில் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணிகளை 50 நாட்களுக்குள் நடத்தி முடிக்கும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணிகளை முகமது மொக்பர், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நாட்டின் உச்சநீதிமன்ற தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி ஆகியோர் அடங்கிய கவுன்சில் குழு மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version