tamilnaadi 74 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் திடீரென கழன்று விழுந்த விமான சக்கரம்

Share

அமெரிக்காவில் திடீரென கழன்று விழுந்த விமான சக்கரம்

அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த போயிங் 757 ரக விமானத்தின் டயர் திடீரென கழன்று விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஜோர்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ‘டெல்டா’ விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.

இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையின் சமிக்ஞைக்காக விமானிகள் காத்திருந்த போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்தது. இதனால் அந்த விமானம் அதிர்ந்தது.

விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

விமானத்தில் இருந்த பயணிகளை விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...