வாக்னர் கூலிப்படை தலைவன் விடுத்த சபதம்
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படை தலைவன் விடுத்த சபதம்

Share

வாக்னர் கூலிப்படை தலைவன் விடுத்த சபதம்

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்ட வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தங்கள் படையின் வெற்றியை இனி தடுக்க முடியாது என சபதம் செய்துள்ளார்.

ரஷ்யாவில் ராணுவ தலைமைக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை முன்னெடுத்து, திடீரென்று கைவிட்டு, தற்போது பெலாரஸ் நாட்டிற்கு வெளியேற்றப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக காணொளி பதிவாக வெளியிட்டு, தமது நிலைப்பாட்டை வெளியிடும் எவ்ஜெனி பிரிகோஜின், முதல்முறையாக ஓடியோ பதிவை வெளியிட்டுள்ளார். மட்டுமின்றி, ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எதிராக முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர்,

வெளியேற்றப்பட்ட எவ்ஜெனி பிரிகோஜின், இதுவரை எந்த கருத்தையும் வெளியிடாத நிலையில், தற்போது முதன்முறையாக அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்கள் நீதிக்கான அணிவகுப்பு என்பது துரோகிகளை எதிர்த்துப் போராடுவதையும் சமூகத்தை அணிதிரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது என அந்த ஓடியோவில் பிரிகோஜின் குறிப்பிட்டுள்ளார்.

இதில் நாங்கள் பெரும்பாலும் வெற்றி வாகை சூடியுள்ளோம். எதிர்காலத்தில், எங்கள் அடுத்த வெற்றிகளை நீங்கள் முன்னணியில் காண்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஓடியோவில் தாம் எங்கிருக்கிறேன் என்பதை குறிப்பிடாமல் பேசியுள்ளதுடன், தமது படை உரிய நேரத்தில் மீண்டும் களமிறங்கும் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எதிராக ஜூன் 24ம் திகதி ஆயுத கிளர்ச்சியை முன்னெடுக்கும் வரையில், ரஷ்ய முன்னணித் தலைவர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டு வந்துள்ளார் எவ்ஜெனி பிரிகோஜின்.

ஆனால் தற்போது அவர் தொடர்பான எந்த தகவலையும் வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் வாக்னர் கூலிப்படையின் கொடூர நடவடிக்கைகளை கொண்டாடிய ரஷ்ய ஊடகங்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறது.

மட்டுமின்றி, ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் எவ்ஜெனி பிரிகோஜின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனிடையே, ரஷ்ய ஆதரவு பெலாரஸ் நாட்டில், வாக்னர் கூலிப்படையின் முகாம்கள் தொடர்பில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Osipovichi மாவட்டத்தில் கைவிடப்பட்ட ராணுவ முகாம் ஒன்றை பயன்படுத்த வாக்னர் கூலிப்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது 298 கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு கூடாரத்தில் 30 பேரக்ள் வரையில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பெலாரஸ் முகாமில் சுமார் 8,000 வாக்னர் வீரர்கள் ஒன்று திரண்டுள்ளதாகவும், அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...