6 15 scaled
உலகம்செய்திகள்

எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் – ஜெலென்ஸ்கி

Share

எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் – ஜெலென்ஸ்கி

உக்ரைன் படைகள் எல்லாவற்றையும் மீறி முன்னேறி வருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

18 மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர், இருதரப்பில் இருந்தும் ட்ரோன் தாக்குதலாக சென்று கொண்டிருக்கிறது.

பல நாடுகளின் உதவிகளை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பெற்று வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் போராடி வருகிறது.

இதற்கிடையில் தங்கள் நாட்டின் பள்ளி மாணவர்கள் படிப்பை தொடங்கியிருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

அவர், போர் இருக்கும் சமயத்திலும் உக்ரேனிய பள்ளி மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கியிருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் ‘உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன. எல்லாவற்றையும் மீறி, யார் என்ன சொன்னாலும், நாங்கள் முன்னேறுகிறோம். அதுதான் மிக முக்கியமான விடயம். நாங்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்அரசியல்இலங்கை

டிக்கோயா மருத்துவமனை சவச்சாலையில் உடலத்திற்கு அவமரியாதை: ஊழியர்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்

ஹட்டன் – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலத்திற்குச் சவச்சாலையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக்...

10 2
செய்திகள்உலகம்

அமெரிக்க – பிரிட்டன் உறவில் விரிசல்: பிரதமர் கீர் ஸ்டார்மரை பகிரங்கமாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க...

09 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய நடைமுறை: வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை ‘TIN’ சான்றிதழ் கட்டாயம்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல...

08 2
செய்திகள்இலங்கை

ஈரான் மீதான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்: ரிஷாட் பதியுதீன் அறிக்கை

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும்...