6 15 scaled
உலகம்செய்திகள்

எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் – ஜெலென்ஸ்கி

Share

எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் – ஜெலென்ஸ்கி

உக்ரைன் படைகள் எல்லாவற்றையும் மீறி முன்னேறி வருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

18 மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர், இருதரப்பில் இருந்தும் ட்ரோன் தாக்குதலாக சென்று கொண்டிருக்கிறது.

பல நாடுகளின் உதவிகளை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பெற்று வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் போராடி வருகிறது.

இதற்கிடையில் தங்கள் நாட்டின் பள்ளி மாணவர்கள் படிப்பை தொடங்கியிருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

அவர், போர் இருக்கும் சமயத்திலும் உக்ரேனிய பள்ளி மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கியிருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் ‘உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன. எல்லாவற்றையும் மீறி, யார் என்ன சொன்னாலும், நாங்கள் முன்னேறுகிறோம். அதுதான் மிக முக்கியமான விடயம். நாங்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...