ஜப்பானில் எரிமலை வெடிப்பு- மக்கள் உடன் வெளியேற வலியுறுத்து!!

1735172 volcano1

தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது.

இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எரிமலையின் வெடிப்பினாலான சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் இல்லை என்று துணை தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிகோ இசோசாகி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எரிமயைில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதே நேரத்தில் இதனால் எழும் புகை சுமார் 300 மீட்டர் உயரத்திற்கு எட்டியுள்ளது.

இதனால், சகுராஜிமாவின் எரிமலை பள்ளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிமுரா நகரம் மற்றும் ஃபுருசாடோ நகரத்தின் குடியிருப்பு பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எரிமலை கண்காணிப்பு பிரிவின் சுயோஷி நகாட்சுஜி தெரிவித்தார்.

#World

Exit mobile version