ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு
உலகம்செய்திகள்

ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு

Share

ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு

ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நாடுகள்?
அந்த நாடுகள், டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகள் ஆகும்.

இந்த விசா கட்டுப்பாடுகள் புலம்பெயர்தல் மற்றும் எல்லை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே என்று கூறியுள்ள உள்துறைச் செயலாரன சுவெல்லா பிரேவர்மேன், இந்த கட்டுப்பாடுகள் அந்த நாடுகளுடனான உறவு சரியில்லை என்பதற்கான அடையாளம் அல்ல என்று கூறியுள்ளார்

காரணம் என்ன?
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில், டொமினிக்காவும் வானுவாட்டுவும் முதலீடு செய்வபர்களுக்கு குடியுரிமை வழங்குவது, புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதை தெளிவாகக் காட்டுவதாக தெரிவித்துள்ளதுடன், அந்நாடுகள் பிரித்தானியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு குடியுரிமை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, நமீபியா மற்றும் ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியா வருவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ள பிரேவர்மேன், அந்நாட்டுக் குடிமக்களும் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திமோர் – லெஸ்தே குடிமக்களோ மோசடி செய்து பிரித்தானியாவில் வாழ முயல்வது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முறைப்படி பிரித்தானியா வர முன்பதிவு செய்துள்ளோர், மாற்றங்களுக்கு தயாராவதற்காக அவர்களுக்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...