da99d0f7 9369 4691 9ce4 b823f4a38112
உலகம்செய்திகள்

டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றவர்களிற்கு பரிதாபநிலை!!

Share

டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றவர்களிற்கு பரிதாபநிலை!!

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் காணச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயோர்க்கிற்கு பயணித்தது. அப்போது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,600 பேர் பலியாகினர்.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் 1985ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது. இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணத்தில் 4 போ் இணைந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் தலா 250,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் நியூயேதர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இவ்வளவு பணம் செலுத்தி பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளில் ஆக்‌ஷன் ஏவியேஷன் என்ற விமான நிறுவனத்தின் தலைவர் ஹமிஷ் ஹார்டின், பாகிஸ்தானின் பிரபல கோடிஸ்வர குடும்ப உறுப்பினர்களான எங்ரோ கொர்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் ஆகியோர் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவில் இணைந்த நான்காவது நபர் Oceangate நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் அதன் நிறுவனர் Stockton Rush எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் கெப்டனாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போல் ஹென்றி நர்கெலோட் செயற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.titan sottomarin titanic turisti

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...