இந்தியாஉலகம்செய்திகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா

Share
24 65ffb77101049
Share

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா

மக்களவை தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுகிறார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

அதில், 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

20 பெண் வேட்பாளர்களில் ஒருவராக வீரப்பனின் மகன் வித்யா கிருஷ்ணகிரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாஜகவில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேடையில் வேட்பாளராக வித்யா அறிவிக்கப்பட்ட போது, தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்போது ஐயா “வனம் காக்க போராடினார்”, “இனம் காக்க நானும், என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...