2 28
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

Share

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3,000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றது மற்றும் நாட்டின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான, கனடாவின் உறுதிப்பாட்டை அவர் இந்த அறிக்கையில் புதுப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

இது, உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனேடியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூருவதில், கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் திட்டத்தை கனடா ஸ்தாபித்தது என்றும் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனேடியர்களுடன் இணைந்து கொள்வதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“கனேடியர்களாக ஒன்றாக, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம்” “அத்துடன் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, மிகவும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க மீண்டும் உறுதியளிப்போம்” என்றும் கனேடிய பிரதமர், கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...