உலகம்செய்திகள்

உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்கள் ரத்து

Share
14 28
Share

உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்கள் ரத்து

அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான யுஎஸ்எய்ட்’டின், வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90% ற்கும் அதிகமானவற்றையும், உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்களையும் நீக்குவதாக, ட்ரம்ப்(Donald Trump) நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று(26) வெளியிடப்பட்டுள்ளது.

USAID நிறுவனத் திட்டங்கள் ஒரு தாராளவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், பணத்தை வீணடிப்பதாகவும், ட்ரம்ப் மற்றும் அவரின் நண்பர் மஸ்க் ஆகியோர் கூறி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2025, ஜனவரி 20 அன்று ட்ரம்ப், எந்தெந்த வெளிநாட்டு உதவித் திட்டங்கள் தொடரத் தகுதியானவை என்பதை 90 நாள் திட்ட அடிப்படையில் மதிப்பாய்வு செய்ய உத்தரவிட்டார், மேலும் அனைத்து வெளிநாட்டு உதவி நிதிகளையும் கிட்டத்தட்ட ஒரே இரவில் துண்டித்தார்.

இந்த நிதி முடக்கம் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க நிதியுதவி திட்டங்களை நிறுத்தியுள்ளது, இதனடிப்படையில், ட்ரம்ப் நிர்வாகம், பெரும்பாலான USAID ஊழியர்களை கட்டாய விடுப்பு மற்றும் பணிநீக்கம் மூலம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பணிநீக்கங்களை மதிப்பாய்வு செய்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், ட்ரம்ப் நிர்வாகம் 6,200 USAID ஒப்பந்தங்களில் 5,800 ஐ, அதாவது 54 பில்லியன் டொலர்களை நீக்குவதாகக் கூறியுள்ளது.

9,100 வெளியுறவுத் துறை மானியங்களில் 4,100 அதாவது 4.4 பில்லியன் டொலர்கள் குறைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...