இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

24 662216bdf1336

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது.

அதன்படி டெல் அவிவ் (Tel Aviv) பிராந்தியத்தின் ஹெர்ஸ்லியா (Herzliya), நெதன்யா (Netanya), எவன் யெஹுதா (Even Yehuda) ஜெருசலேம் (Jerusalem) மற்றும் பீர் ஷெவா (Be’er Sheva) பகுதிகளுக்கு வெளியே அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்குக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேல் ஈரான் மோதலினால் இஸ்ரேலில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியா தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் அதிக அச்சுறுத்தல் பிராந்தியம் முழுவதும் உள்ளது எனவும் பாதுகாப்பு நிலைமை விரைவாக மோசமடையக்கூடும், ”என்று அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

இதேவேளை விமான சேவைகள் ரத்து செய்தல் மற்றும் பிற பயண இடையூறுகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலிலிருக்கும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு எச்சரித்துள்ளது.

Exit mobile version