கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா, வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் ஒன்றுக்கும், அதனுடன் தொடர்புடைய ஆறு கப்பல்களுக்கும் புதிய தடைகளை விதித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெனிசுலா உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். மசகு எண்ணெய் உற்பத்தி அந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகும்.
கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல வெனிசுலா உதவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கடத்தலின் மூலம் ஈரானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு வருவாய் ஈட்ட உதவுவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.
2022ஆம் ஆண்டு ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்துவதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அந்தத் தடையை மீறி, வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு மசகு எண்ணெய் கொண்டு சென்ற கப்பல் ஒன்று பயணம் செய்தபோது, அதை அமெரிக்கக் கடற்படையினர் கைப்பற்றினர்.
மசகு எண்ணெய் கடத்தலுக்கு உதவியதாகக் கூறப்படும் வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் ஒன்றுக்கும், அதனுடன் தொடர்புடைய ஆறு கப்பல்களுக்கும் அமெரிக்கா தற்போது புதிய தடைகளை விதித்துள்ளது.
இந்தத் தடைகள் மூலம், குறித்த நிறுவனம் மற்றும் கப்பல்களின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.