செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த சேதமடைந்துள்ளது.
செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று செங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறை ஆகும்.
அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் முயற்சியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, F/A-18 Super Hornet ரகத்தைச் சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை யுஎஸ்எஸ் ஹாரி எஸ் ட்ரூமன்(USS Harry S Truman) என்ற அமெரிக்க கடற்படைக் கப்பலில் தரையிறங்க முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தோல்வியின் காரணமாக விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, உடனடியாக செயல்பட்ட மீட்புக் குழுவினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் விமானிகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், கப்பலில் இருந்த மற்ற பணியாளர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இதே விமானம் தாங்கி கப்பலில் நிகழ்ந்த மற்றொரு விபத்தைத் தொடர்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.