7 6
உலகம்செய்திகள்

ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..

Share

அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியமான மூன்று அணு ஆயுத தளங்களை அழித்த பிறகு, ஈரான் மீண்டும் இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹைஃபா மற்றும் தெல் அவிவ் நகரங்களை நோக்கி இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகள ஏவியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தெல் அவிவுக்கு அருகில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் ஈரானின் இலக்காக இருந்தது என ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

“ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் அலாரம் ஒலிக்கிறது” என இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) “X” தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஈரானின் இந்த புதிய தாக்குதல், முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த அதிரடியான அறிவிப்புக்கு பிறகு இடம்பெற்றுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் நான்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோவ் ஆகிய அணுஆயுத தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதாக நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.

“இந்த தாக்குதல் ஒரு அதிசயமான இராணுவ வெற்றியாகும். ஈரானின் முக்கிய அணுஅமில வாயுநிரப்பு மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில், எதிர்கால தாக்குதல்கள் இன்னும் பெரியதாகவும், எளிதாகவும் இருக்கும்” எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணுஆயுத மையங்களை அழித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாராட்டு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...