ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல தசாப்தங்களாக நடைபெற்ற காலநிலை பேச்சுவார்த்தைகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முன்னேற்றமும் இருந்த போதிலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 3.1°C என்ற பேரழிவுகரமான வெப்பநிலை உயர்வுக்கு நாம் நெருங்கி வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு இடைவெளி அறிக்கையில், பசுமை வாயு வெளியீடுகள் 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவை எட்டியதையும் மற்றும் வளர்ச்சியின் விகிதம் பெருந்தொற்றுக்கு முந்திய காலத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

 

இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதும் மற்றும் நாடுகள் தீவிரமான காலநிலை நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்தாததுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அத்தோடு, தற்போதைய போக்கு பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C இலக்கை நிறைவேற்றுவதற்கு உலகை மிகுந்த போராட்டத்திற்கு இட்டுச் செல்வதாக சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version