ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

24 664b726c03006

ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raizi) மற்றும் அவரது குழுவினருக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த மாதம் சுழலும் கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் மொசாம்பிக் தூதர் பெட்ரோ கொமிசாரியோ அபோன்சோ இந்த மௌன அஞ்சலியை செலுத்துமாறு தனது குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அவரது குழுவினரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பல்வேறு தேசிய தலைவர்களும் அவர்களது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version