கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குத்ரேஸ் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.
இதனால் அவர் பங்குபற்ற இருந்த அனைத்து நிகழச்சிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என தெரியவருகிறது.
ஏற்கனவே அவர் பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment