ஹவுதிகளின் தாக்குதலில் ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்

tamilni 416

ஹவுதிகளின் தாக்குதலில் ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்

செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்தவர்கள் தாக்குதல் ஏற்பட்டவுடன் கப்பலைக் கைவிட்டதால் அந்த கப்பல் பெரும் சேதம் அடைந்து மூழ்கியுள்ளதாக ஹவுதி குழுவின் இராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவித்துள்ளார்.

மேலும், ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட இன்னொரு சரக்கு கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version