இந்த பெண்ணை கண்டால்… இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்
பெற்ற தாயைக் கொலை செய்த பெண் ஒருவர் தப்பியோடிவிட்ட நிலையில், அவரைக் கண்டால், அவரிடம் நெருங்கவேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள்.
இங்கிலாந்திலுள்ள Cradley என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த சூசன்னா (Susanna Van Marle, 69) 202ம்ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி, உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சூசன்னாவைக் கொலை செய்ததாக அவரது மகளான லாரா (Laura Van Marle, 43) கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நிரந்தரமாக மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, Somersetஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் லாராவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், லாரா மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டார். பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவரும் நிலையில், பொதுமக்கள் அவரை நெருங்கவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
லாரா, நீண்ட தூரத்துக்கு நடந்தே செல்லும் திறன்கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment