24 6639ba033ba31
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா

பிரித்தானியா, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதைப்போல, மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டதாக, லீக் ஆன ஆவணங்கள் சிலவற்றிலிருந்து தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கு வரமுடியாது! பிரித்தானியாவில் வாழும் கனவில் வருவோர், ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாழும் நிலைதான் கடைசியில் ஏற்படும்.

இந்நிலையில், ருவாண்டாவைப் போலவே, மற்றொரு நாட்டுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ஆம், புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்ட மற்றொரு நாடு ஈராக். உண்மையில், பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே உள்ளது. விடயம் என்னவென்றால், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம். ஆனால், ஈராக்குக்கோ, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவதுதான் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...