உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு

Share
4 14 scaled
Share

பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் காணாமல் போன நபரின் சடலத்தை பொலிஸார் கிப்பிங் நதியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை Ipswich பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஜூலியன் டி போனோ(Julian De Bono) என்ற முதியவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன அன்று ஜூலியன் இறுதியாக அதிகாலை 1.55 மணி அளவில் டாக்சியில் இருந்து இறங்கும் போது பார்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை தேடி வந்த பொலிஸார் மற்றும் நீருக்கடியில் தேடுதல் நடத்தும் குழு இன்று மதியம் 3 மணியளவில் கிப்பிங் ஆற்றில்(River Gipping) இருந்து அவரது உடலை வெளியே எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜீலியனின் குடும்பத்திற்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மரணத்திற்கான காரணம் நிறுவப்படும் என Suffolk பொலிஸாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறந்தற்கான காரணத்தை தற்போது விவரிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் காணாமல் போனதை தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலமும், நீரில் மூழ்குபவர்கள் உதவியுடனும் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி இருந்து குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...