2 7 1 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம்

Share

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம்

பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் மையங்கள் விரைவில் நிரம்பி வழியலாம் என்பதால், புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை அணிவிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.

பிரித்தானியா, சட்டவிரோத புமபெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.

மிதவைப்படகுகளில் புலம்பெயர்ந்தோரை அடைக்கலாம் என்றால், அங்கு சுகாதாரப் பிரச்சினை. ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டால், அந்த திட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆனாலும், விடாமல் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்துகொண்டே வருகிறது உள்துறை அலுவலகம்.

தடுப்புக்காவல் மையங்கள் நிரம்பும் பட்சத்தில், புகலிடக்கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் முயன்றுபார்த்துவிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்.

பிரித்தானியாவிலிருந்து ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டியுள்ள நிலையில், அவர்களைக் கட்டாயம் கண்காணித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் சுவெல்லா.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால், தடுப்புக்காவல் மையங்களில் 2,500 பேருக்குத்தான் இடம் உள்ளது.

ஆகவே, தடுப்புக்காவல் மையங்களில் இடமில்லாததால் வெளியே நடமாட விடப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தலைமறைவாகிவிடாமல் தடுப்பதற்காக, அவர்களுக்கு, காலில் மின்னணுப்பட்டை அணிவிப்பது முதல் பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் பரிசீலித்துவருவதாக தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...