பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

133242527 gettyimages 2149720428

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடுவதற்காக கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர், சமீபத்தில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையமுயலும் புலம்பெயர்ந்தோரைக் காணச்சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு, பிரித்தானியாவிலிருந்து மீண்டும் பிரான்சுக்கே திரும்பிவிட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவரை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.

அவரது பெயர் ஓமர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கடத்தல்காரர்களுக்கு 12,000 பவுண்டுகள் படகு ஒன்றின் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார் குர்திஸ்தான் நாட்டவரான ஓமர். 20 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் ஒரு கடத்தல்காரருக்கு 500 பவுண்டுகள் கொடுத்து, எப்படியாவது தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடும்படி கையைக் காலைப் பிடித்து படகொன்றில் ஏறி மீண்டும் பிரான்சுக்கே வந்துவிட்டார் அவர்.

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இதைவிட பிரான்சே பரவாயில்லை என பிரான்சுக்கே திரும்பிவிட்டார் அவர்.

பிரான்சில் வாழ்க்கை கஷ்டம்தான். ஆனால், பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கைரேகையைப் பதிவு செய்யவேண்டும், கையெழுத்திடவேண்டும், இவ்வளவும் ஒழுங்காக செய்துவிட்டு, ஒருநாள் உங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றார்கள் பிரித்தானிய அதிகாரிகள்.

அவர்கள் இனி என்னைக் கைது செய்து ருவாண்டாவுக்கோ அல்லது ஈராக்குக்கோ அனுப்பக்கூடும். என்னால் அங்கெல்லாம் போகமுடியாது, ஆகவே பிரான்சுக்கே வந்துவிட்டேன் என்கிறார் ஓமர்.

Exit mobile version