பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

farmers scaled 1

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ‘குடும்பப் பண்ணை வரி’யை (Family Farm Tax) விதிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு லிங்கன்ஷையரில் (Lincolnshire) உள்ள A160 உட்படப் பிரதான வீதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை ஓட்டிச் சென்று இந்தப் போராட்டத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய வரி விதிப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான வீதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exit mobile version