துருக்கி நிலநடுக்கம் – 11 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்புகள்

image 3e1e545e4d 1

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,000 ஐ கடந்துள்ளது.

கடந்த பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடூரமான இயற்கை சீற்றம் இதுவென புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்ததாக துருக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,236 ஆக அதிகரித்துள்ளது.

#world

Exit mobile version