அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது.
சமீபத்தில் தனது அலுவலகத்தில் கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னியை சந்தித்தபோது இந்த தகவலை வெளியிட்டார் ட்ரம்ப்.
அடுத்த சில நாட்களுக்குள், நாங்கள் மிகப்பெரிய றிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறோம் என்று கூறிய ட்ரம்ப், அது வர்த்தகம் தொடர்பானது அல்ல என்றும் கூறினார்.
ஆனால், அந்த விடயம் அதிரவைக்கும் ஒரு விடயமாகவும், அமெரிக்காவுக்கோ நேர்மறையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்பின் இந்த தகவலால் இணையம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. ஒருவர், அது கனடா குறித்த அறிவிப்பாக இருக்குமோ என கேட்க, மற்றொருவர், ட்ரம்ப் சுதந்திர தேவி சிலை போல், தனது சிலை ஒன்றை வைக்கப்போகிறாராக இருக்கும் என்கிறார்.
ஒருவர் சீரியஸாக, ஒருவேளை ஈரான் அணு ஆயுத திட்டம் முடிவுக்கு வருகிறதோ என கேள்வி எழுப்ப, இன்னொருவர், ஜோ பைடன் கைது செய்யப்பட இருக்கிறாராக இருக்கலாம் என்கிறார்.
மொத்தத்தில், ட்ரம்பின் அறிவிப்பு எதைக் குறித்ததாக இருக்கும் என்பதை அறிய இணையம் ஆவலாக உள்ளது.