வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.
அதாவது, வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார்.
ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது.
எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டொலர் மானியங்களையும் 60 மில்லியன் டொலர் ஒப்பந்தங்களையும் ட்ரம்ப் அதிரடியாக நிறுத்தினார்.
பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.