தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்கர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில், இந்த படம் வெளியிடப்பட்டிருந்தது.
2025, ஏப்ரல் 21 அன்று காலமான, பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இரங்கல் தெரிவித்து, புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
நியூயோர்க் மாநில கத்தோலிக்க மாநாடு இந்தப் பதிவைக் கண்டித்ததுடன், ட்ரம்ப் விசுவாசத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.