14 31
உலகம்செய்திகள்

கனேடிய அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ

Share

கனேடிய அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

சொந்த முடிவுகளின் அடிப்படையில்

லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ட்ரூடோ கூறியதை அடுத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய ட்ரூடோ, தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அரசியலை விட்டு வெளியேறிய பிறகு தனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை ட்ரூடோ வெளிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பதைப் பொறுத்தவரையில், அதைப் பற்றி சிந்திக்க தமக்கு அதிக நேரம் இல்லை என்றே ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனேடியர்கள் தன்னைத் தெரிவு செய்த வேலையைச் செய்வதில் தாம் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும், இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, டொனால்டு ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு கனடா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது குறித்து விவாதிக்க அவர் கனடாவின் முதல்வர்கள், அமெரிக்காவிற்கான தூதர் மற்றும் சில பெடரல் அமைச்சரவை சகாக்களையும் சந்தித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பணியாற்றிய நிலையில், எதிர்க்கட்சிகளிடமிருந்தும் சொந்த கட்சிக்குள்ளும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை ட்ரூடோ எதிர்கொண்டார்.

அவரது நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்த பிறகு இந்த அழுத்தம் தீவிரமடைந்தது. ட்ரூடோவுக்கு பதிலாக புதிய ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் உத்தியோகப்பூர்வமாக இதுவரை துவங்கவில்லை என்ரே கூறப்படுகிறது.

ஆனால் சில நன்கு பிரபலமான லிபரல் தலைவர்கள் போட்டியிடுவதற்கான தங்கள் விருப்பங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். ஆர்வமுள்ள தலைவர்கள் ஜனவரி 23 ஆம் திகதிக்குள் கட்சிக்குத் தெரிவித்து முதற்கட்டப் பணத்தைச் செலுத்த வேண்டும், மேலும் கட்சியின் புதிய தலைவர் மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கப்படுவார்.

கனடாவின் முன்னாள் வங்கி ஆளுநர் மார்க் கார்னி மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ஆகியோர் முன்னணி போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...