7 6
உலகம்செய்திகள்

கனடா பின்னோக்கி செல்லாது – ஜஸ்டின் ட்ரூடோ

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதித்தமைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

“இன்று, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளியான கனடாவிற்கு எதிராக வணிகப் போரை ஆரம்பித்துள்ளது,” தெரிவித்துள்ளார்.

“அதே நேரத்தில், அவர்கள் ரஷ்யாவுடன் நேர்மறையாக செயல்பட விரும்புகிறார்கள், விளாடிமிர் புடினை சமாதானப்படுத்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் தற்காலிகமாக 30 நாட்கள் விடுவித்திருந்த வரிக் கட்டுப்பாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து கனடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, கனடா இரண்டு கட்டங்களில் அமெரிக்காவுக்கு எதிராக $30 பில்லியன் வரிக்கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்துகிறது.

மேலும் $125 பில்லியன் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 21 நாட்கள் கழித்து கூடுதல் வரிகள் விதிக்கப்பட உள்ளது. “கனடியர்கள் நாகரிகமானவர்கள், ஆனால் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டார்கள்,” என்று ட்ரூடோ உறுதியளித்தார்.

கனடாவின் நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, 25% பதிலடி வரிகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, கழிவறை காகிதம், ஆடைகள், பாதணி, அழகு சாதனப் பொருட்கள், பயணப்பைகளின் உட்பட பலவகை பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...