11 13
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா: ட்ரூடோ கூறிய காரணம்

Share

அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா: ட்ரூடோ கூறிய காரணம்

கனடாவை(Canada) அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவதற்கு இது தான் காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு முக்கியமான கலந்துரையாடலில் கூறியதாக கனடாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க(USA) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வதாக டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதற்கான யோசனையை அவரிடம் தெரிவித்திருந்தார்.

மேலும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டொனால்டு ட்ரம்ப் தம்முடைய சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அத்துடன் கனடா – அமெரிக்கா எல்லை குறித்த வரைபடத்தையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தான் அண்மையில் கனடா, சீனா மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்குப் பிறகு கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, , கனடாவில் வர்த்தக அமைப்பினருடன் மூடப்பட்ட அறையில் நடந்த ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய தகவல்கள் கசிந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தான் டொனால்ட் ட்ரம்பின் திட்டம் குறித்தும் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள இயற்கை வளங்கள் மூலம் பலனடைவதே ட்ரம்ப்பின் விருப்பம், அதனால் தான் அடிக்கடி நம்மை அமெரிக்காவுடன் இணைத்து அதன் 51வது மாகாணமாக மாற்றுவது பற்றி பேசி வருகிறார்கள்.

அவர்கள் நமது வளங்களைப் பற்றியும், நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றின் பயன்களை அடையவும் விரும்புகிறார்கள்” என ட்ரூடோ பேசியதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

பசுமை எரிசக்திக்கான முக்கிய தேவைகளான லித்தியம், கிராஃபைட், நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் கனடாவில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...