கனடா மக்களுக்கு பயண எச்சரிக்கை

24 661ae0ae35406

கனடா மக்களுக்கு பயண எச்சரிக்கை

இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு நாட்டுப் பிரஜைகளுக்கு கனேடிய வெளிவிவகார அமைச்சினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிராந்திய வலயத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாகவும், மேற்கு கரையில் வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு நிலைமை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி தெரிவித்துள்ளதோடு எந்த நேரத்திலும் நாட்டில் வன்முறைகள் வெடிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version