உலகின் 196 நாடுகளுக்கும் பயணம்! – அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை!

lexi 2021 09 23

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த லெக்சி அல்போர்ட் (23) என்பவரே இச் சாதனையைப் படைத்துள்ளார்.

லெக்சி அல்போர்ட் 196 நாடுகளுக்கு பயணம் செய்ததன் மூலம் இளம் வயதில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

24 வயதில் ஜேம்ஸ் அஸ்க்வித் 2013 ஆம் ஆண்டில் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை, 2021 ஆம் ஆண்டில் லெக்சி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version