download 3 1 8
உலகம்செய்திகள்

70 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முடிசூட்டு விழா!

Share

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டுவிழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது.

மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது.

அதனை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது.

மன்னர் 3-ம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார். அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார்.

அதன்பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும். மேலும், பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார்.

அன்றைய தினமே மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார். இதற்கிடையே, மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

இந்நிலையில், இளவரசர் ஹாரி, மே 6-ம் தேதி தனது தந்தை 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...