tamilni 344 scaled
உலகம்செய்திகள்

2024ல் மிகவும் பணக்கார நாடுகள் இவை தான்

Share

2024ல் மிகவும் பணக்கார நாடுகள் இவை தான்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பொதுவாக ஆண்டுதோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிற்கான அளவுருவாகவும் கருதப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தனிநபர் GDP அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் Luxembourg நாடும், பத்தாவது இடத்தில் Macao SAR நாடும் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில்,

இரண்டாவது இடத்தில் அயர்லாந்தும் 3வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 4வது இடத்தில் நார்வே, சிங்கப்பூர் (5), ஐஸ்லாந்து (6), கத்தார் (7), அமெரிக்கா (8) டென்மார்க் (9), Macao SAR (10).

இதில் தனிநபர் GDP-ஐ கருத்தில் கொண்டு இந்தியாவின் நிலை 129வது இடத்தில் உள்ளது என்றே தெரியவந்துள்ளது. ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனியை அடுத்து இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...