ஏற்கனவே மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கியைக் காணாமல் மக்கள் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில், படகுகள் பல மாயமாகும், விமான விபத்து ஏற்படும் என திடுக் செய்தி ஒன்றை வெளியிட்டு கலங்க வைத்துள்ளார் டைம் ட்ராவலர் ஒருவர்.
@darknesstimetravel என்ற பெயரில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் ஒருவர், தான் ஒரு டைம் ட்ராவலர் என்றும், தான் 2058ஆம் ஆண்டிலிருந்து வந்துள்ளதாகவும், 2023க்கும் 2024க்கும் இடையில் பல பயங்கர விடயங்கள் உலகில் நிகழவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, அதாவது, 2023 டிசம்பர் 13ஆம் திகதியன்று, அமெரிக்காவின் Wisconsin மாகாணத்தின் மேற்குப் பகுதியில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகும் என்றும், பயணிகளில் பாதி பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார் அவர்.
அக்டோபர் 19ஆம் திகதி, பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியை மர்ம ஒளிரும் மேகம் ஒன்று மூடும் என்றும், செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, பெர்முடா முக்கோணப் பகுதியில் பல படகுகளும் விமானங்களும் மாயமாகும் என்றும் கூறியுள்ளார் அந்த
பலரும், இந்த விடயங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், சரி நீங்கள் சொல்வது உண்மையானால், 2058இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று கூறுகிறார் ஒருவர்.
Leave a comment