பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது: சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி

tamilni 139

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது, 2024ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களின் வாங்கும் திறன் குறையும் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டில், ஊதிய உயர்வு 1.9 சதவிகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அந்த ஊதிய உயர்வு, விலைவாசியை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

பெரும்பாலான நிறுவனங்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ஊதிய உயர்வு வழங்கும் என்றாலும், அது போதுமானதாக இருக்காது.

நிறுவனங்கள் அதற்கு மேல் எந்த உதவியும் செய்யாது என்கிறார் UBS’s annual salary survey என்னும் ஆய்வமைப்பின் தலைவரான Florian Germanier.

பணவீக்கம் 2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழங்கப்பட இருக்கும் உண்மையான ஊதிய உயர்வால் பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது என்பதுடன், சுவிஸ் நுகர்வோர் விலை குறியீட்டில் மருத்துவக் காப்பீடும் இணைக்கப்படாததால், 2024இல் மக்களுடைய பொருட்கள் வாங்கும் திறனில் இழப்பு ஏற்பட உள்ளது.

எளிய வார்த்தைகளில் கூறினால், நினைத்த பொருளை வாங்க யோசிக்கும் நிலை பொதுமக்களுக்கு உருவாகும்!

Exit mobile version